வலைப்பதிவாக்கம் >>>>>>>>>>>>>>> சுந்தரக்கண்ணன் >>>>>>>>>>>>>>>>> 9442352000

x

x
தோழியர் பிருந்தா கரத்துடன்
U.Vasuki Com. Vasuki, aged 57 years, she is B.Com graduate, she is a member of the Central Committee of the CPI(M) and National Vice President of the All India Democratic Women’s Association. She has been working since 1977 as a CPI (M) activist. She had been a bank employee for many years, and took voluntary retirement in 2000 to work as a full time worker of the party. She has discharged several important responsibilities in AIDWA and has led and participated in many struggles against gender injustice and for gender equality. These include the exposure of Premananda, the fight for justice for Padmini of Chidambaram, a victim of police atrocities, the struggle against Coca Cola in Padamathur in Sivaganga district, the fight for justice to girl students and residents in hostels who were sexually harassed in several districts including Chennai, Kanchipuram and Madurai, and many other struggles. She has also actively participated in the struggles against untouchability in Uthapuram, in Madurai, in Pudukkottai and elsewhere. She has fought for the basic issues of people in Chennai and elsewhere in the state. She is married to A.B.Viswanathan. She has a daughter named Anupama. Vasuki’s father is R.Umanath, an outstanding parliamentarian, a member of the Politbureau of the CPI(M) for many years, and currently, a member of the Central Committee of the CPI(M). Her mother, the late Pappa Umanath, was one of the foremost leaders of the CPI(M) and of AIDWA, and had also served as a member of the Tamil Nadu Legislative Assembly.
<=============================================================================================================>
இவ் வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்பது உங்கள் அன்புத்தோழர் உ.வாசுகி
<=============================================================================================================>

U.VASUKI

U.VASUKI

U Vasuki

U Vasuki

வெள்ளி, 6 மார்ச், 2015

உண்மையை மறைக்கும் முதல்வரின் அறிக்கை தேன்கனிக்கோட்டை ஆர்ப்பாட்டத்தில் உ.வாசுகி கண்டனம்





கிருஷ்ணகிரி, மார்ச் 5-
வாய்பேச இயலாத சிறுமி கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டமன்றத்தில் அளித்த அறிக்கை முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல் உள்ளதாக கூறிய உ.வாசுகி அந்த அறிக்கையை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.தேன்கனிக்கோட்டை வட்டம் கீழ் கொச்சாவூரில் கடந்த டிசம்பர் 25 அன்று காது கேளாத வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி சிறுமி சமூக விரோதிகளால் கூட்டு வல்லுறவு செய்யப்பட்டார்.
காவல்துறையின் திசை திருப்பும் நடவடிக்கைகளை கண்டித்தும், சிபிஐ விசாரணை கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதனன்று (மார்ச் 4) ஆர்ப்பாட்டம் நடந்தது. தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இப்போராட்டத்திற்கு கட்சியின் வட்ட செயலாளர் ஆர்.சேகர் தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர் பி.ஜான்சிராணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
அப்போது உ.வாசுகி கூறியதாவது:-இங்கு ஒரு வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமிக்கு எதிராக நடந்துள்ள கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் நியாயம் கிடைக்க வேண்டியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இது போன்ற அநீதிகளுக்கு எதிராக மற்ற கட்சிகள் போராடாத போது மாறுபட்ட ஒரு கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதை செய்கிறது.ஓசூரில், ராஜஸ்தானை சேர்ந்த 2 பெண்களும் 2 சிறுமிகளும் காவல் கட்டுப்பாட்டு அறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்கள். உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்து அவர்கள் நால்வருக்கும் 12 லட்சம் ரூபாய் கிடைக்க உதவினோம்.
தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் பழங்குடியின பெண்கள் அடக்கு முறை மற்றும் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட போது அவர்களுக்கு ஆதரவாக நின்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மலைவாழ் மக்கள் சங்கமும் தான் 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக போராடி நியாயம் கிடைக்கச் செய்தது இந்த கட்சி. வாச்சாத்தி மக்கள் பாதிக்கப்பட்ட போதும் தமிழக சட்டமன்றத்தில் மறுத்தவர்கள் அதிமுகவினர். இதே பகுதியில் தளி காவல் நிலையத்தில் ஆய்வாளரால் ஆசிரியை ஒருவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சம்பவம் அதிமுக ஆட்சியில் தான் நடந்தது. தேர்தல் ஆதாயத்துக்காக அதை பயன்படுத்திய திமுக அந்த பெண்ணின் இரட்டை பெயரை குறிப்பிட்டு இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டதாக சுவரொட்டி வெளியிட்டது.
அந்த அளவில் தான் மற்ற அரசியல் கட்சிகளின் அக்கறை உள்ளது. இப்போதும் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நடந்துள்ள கொடுமைகளை மூடி மறைக்கும் முயற்சியாக அதிகாரிகள் எழுதிக் கொடுத்ததை தமிழக முதல்வர் அறிக்கையாக படித்துள்ளார். அந்த தவறான அறிக்கையை தமிழக முதல்வர் திரும்ப பெற வேண்டும். வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையிடம் லட்சக்கணக்கில் பணம் தருவதாக காவல்துறையினர் கூறியும் அதை ஏற்காமல் தனது மகளுக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நீதி கேட்கும் அந்த பெற்றோர்களை பாராட்ட வேண்டும்.
பெண்கள் பாதிக்கப்படும் போது உடனடியாக நேரில் சென்று அதிகாரிகளை அழைத்துப் பேசி நியாயம் கிடைப்பதற்கு உதவத்தான் மகளிர் ஆணையம் என்கிற சட்டப்பூர்வமான அமைப்பை போராடி பெற்றுள்ளோம். ஆனால் தமிழக அரசு 90 வயதான மூதாட்டியை மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமித்து அதன் பணிகளை முடக்குகிறது. ஆளும் கட்சியினரின் நிர்ப்பந்தத்தால் பல சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. எல்லா நேரத்திலும் மக்களை ஏமாற்ற முடியாது. இலவசங்கள் எப்போதுமே அதிமுகவுக்கு ஓட்டுக்களை பெற்றுத்தரும் என கனவு காண வேண்டாம். கடந்த காலங்களில் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் அதிமுக தோல்வி கண்ட வரலாறு உள்ளது.
புதுதில்லியில் நடந்த பாலியல் கூட்டு வல்லுறவு சம்பவத்துக்கு பிறகு சட்ட திருத்தம் கொண்டு வர ஜெ.எஸ்.வர்மா தலைமையிலான ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. அந்த குழுவின் முன்பு ஆஜராகி பல்வேறு ஆலோசனைகளை முன் வைத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான்.இவ்வாறு வாசுகி பேசினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பகுதியில் இது போன்ற ஏராளமான பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. அவற்றை ஒரு நீதிபதி தலைமையில் ஊடகதுறையினர், சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பினரை கொண்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில தலைவர் பா.ஜான்சிராணி பேசுகையில், குற்றவாளிகள் தப்பிக்க உதவும் வகையில் தேன்கனிக்கோட்டை, ஓசூர் அரசு மருத்துவமனைகளில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளன. தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் மற்றும் அஞ்செட்டி காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யாமல் காலம் கடத்தினர். மாற்றுத்திறனாளிகள் சங்கம் போராட்ட அறிவிப்பு செய்த பிறகு ஆறு நாட்கள் கழித்து டிசம்பர் 31 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவரது தந்தையையும் காவல் துறையினர் நடத்திய விதம், விசாரணை என்கிற பெயரால் உண்மையை மூடி மறைக்க மேற்கொண்ட முயற்சிகள் வரிசையாக அம்பலமாகின.
சிறார் பாதுகாப்பு சட்டத்திற்கு மாறாக அவர்கள் செயல்பட்டனர். அதை தொடர்ந்து சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் சிறுமியின் தந்தை சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் முதல்வரின் கவனத்திற்கு இப்பிரச்சனையை கொண்டு சென்றனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தின் போது தமிழக முதல்வர் ஒரு அறிக்கை அளித்தார். அது ஏற்கனவே இந்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உண்மைக்கு மாறாக கூறி வரும் நடவடிக்கைகளின் தொகுப்பாகவே உள்ளது என்று தெரிவித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.சுந்தரராஜன், மாவட்ட செயலாளர் ஜி.சேகர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் எஸ்.டி.சங்கரி மற்றும் ஏராளமான பெண்கள் உட்பட சுமார் 500 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

நன்றி தீக்கதிர்


சர்வதேச மகளிர் தினம்: சிபிஐ(எம்) வாழ்த்து1

‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே’ என்ற பாரதிதாசனின் வரிகள், சமுதாயத்தின் சரிபாதி விடுதலை பெறுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. கம்யூனிஸ்டுகள் அனைத்துவித பாகுபாடுகளையும் களைவதற்கான போராட்டங்களுக்கு சொந்தக்காரர்கள் என்ற முறையில் உலகெங்கிலும் உயர்ந்த லட்சியத்துக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடும் பெண்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு இந்நாளில் தன் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.
முதலாளித்துவத்தின் இன்றைய முகமான நவீன தாராளமயம் சாதாரண மக்களின் வாழ்வுரிமைக்கும் வாழ்வாதாரத்துக்கும் எதிராக யுத்தம் நடத்துகிற காலம் இது. பொருளாதார பாகுபாடுகள் அதிகரித்து வருகின்றன. விலைவாசி ஏறுமுகமாகவே இருக்கிறது. அனைத்தும் வணிகமயமாகும் சூழலில், இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் வெட்டிச் சுருக்கப்படும் போது பெரும்பாலான குடும்பங்கள் ஈடுகொடுக்க முடியாமல் திணறுகின்றன. ஏற்கனவே சமமற்றதாக உள்ள பெண்களின் நிலை இதனால் மேலும் பின்தள்ளப்படுகின்றது.
சாதி வெறியும், மத வெறியும் திட்டமிட்டுக் கிளப்பப்படுகின்றன. இவற்றின் முக்கிய கூறாக ஆணாதிக்கம் நிலவுகிறது. பெண்களின் சம உரிமை கருத்தியலை இவை மறுதலிக்கின்றன. வாழ்க்கை துணையைத் தேர்வு செய்யும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்படுகிறது. சாதி, மத தாக்குதல்களில் தலித் மற்றும் சிறுபான்மை பகுதிகளைச் சார்ந்த பெண்கள் கூடுதல் பாதிப்புகளை சந்திக்கின்றனர். பண்டிகைகளும், வழிபாடும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துக்காக மதவெறி சக்திகளால் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பெண்களும் இரையாகின்றனர், இலக்காகின்றனர். மொத்தத்தில் ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில் செயல்படும் பிஜேபி அரசாங்கத்தின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு திசை வழி, சம நீதி, சமூகநீதி கோட்பாடுகளை சிதைக்கின்றது.
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. கௌரவக் கொலைகள் பரவலாக நடக்கின்றன. குடும்ப வன்முறையில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. காவல்துறையின் மனித உரிமை மீறல்களும் இக்காலத்தில் தொடர்கின்றன. மாற்றுத்திறனாளி பெண்கள் மீதான வன்முறை நிகழ்வுகள் அண்மைக்காலத்தில் அதிகம் வெளி வந்து கொண்டிருக்கின்றன. போதை பழக்கம் வன்முறை அதிகரிப்பின் பின்புலமாக உள்ளது. சட்ட அந்தஸ்து கிடைத்தும் மாநில பெண்கள் ஆணையத்தின் செயல்பாடு முடங்கிக் கிடக்கிறது. அதே சமயம் நியாயம் கேட்டுப் போராட பெண்கள் முன்வருவதும் அதிகரித்திருக்கிறது.
கிராமப்புறங்களில் ஊரக வேலை சட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு சரிந்துள்ளது. சட்டத்தையே கிடப்பில் போடும் ஏற்பாடுகள் நடக்கின்றன. தொழிலாளர் நல சட்டங்கள் தளர்த்தப்படுவதும், சங்கம் வைக்கும் உரிமை மறுக்கப்படுவதும் பெண் தொழிலாளர்களைப் பெரிதும் பாதிக்கின்றன. ஊடகங்களில் பெண்கள் சித்தரிப்பு பிற்போக்குக் கருத்தியலை வலுப்படுத்துவதாக உள்ளது. இத்தடைகளை எல்லாம் தாண்டி, பல்வேறு துறைகளில் பெண்கள் முத்திரை பதித்து வருகின்றனர். அவர்களின் திறமைகளும், சாதனைகளும் சமூகத்திற்கு மறுக்க இயலாத பங்கினைச் செலுத்தி வருகின்றன.
தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்யும் திமுக, அதிமுக போதை பழக்கத்துக்கு எதிராக, சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக, மதவெறிக்கு எதிராக, பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராக வலுவான பிரச்சாரம் செய்வதற்குத் தயாராக இல்லை. அத்தகைய சமூக சீர்திருத்த பிரச்சாரம் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியம் முன்னைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது பங்கினை நிச்சயம் செலுத்தும். இந்நிலையில், பல்வேறு நாடுகளில் ஜனநாயக மற்றும் வாழ்வுரிமை கோரிக்கைகளுக்கான போராட்டங்களில் பெண்களின் பங்கு கணிசமாக உயர்ந்து வருகிறது. அரசாங்கங்களின் கருணையினால் எதுவும் நடப்பது கிடையாது, போராட்டம் தான் தீர்வுக்கான வழி என்ற புரிதலுடன் தமிழகப் பெண்களும் போராட்டக் களத்தில் நிற்கின்றனர். அவர்களுடன் இணைந்தும், வழிகாட்டியும் சமநீதிப் பாதையில் தடைகளைத் தகர்த்து முன்னேறுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி ஏற்கிறது.

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

சிபிஎம் மாநிலச் செயலாளராக ஜி.ராமகிருஷ்ணன் தேர்வு

 சிபிஎம் மாநிலச் செயலாளராக ஜி.ராமகிருஷ்ணன் தேர்வு



இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில 21வது மாநாடு பிப்ரவரி 16-19, 2015 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் சீத்தாராம் யெச்சூரி, கே. வரதராசன், பிருந்தா காரத், ஏ.கே. பத்மநாபன் மற்றும் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்,
மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன் எம்.பி., உ. வாசுகி, அ. சவுந்தரராசன் எம்எல்ஏ, பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, சுதா சுந்தரராமன் உள்ளிட்டு மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழகம் முழுவதிலுமிருந்து 600 பிரதிநிதிகள், 39 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
புதிய மாநிலக்குழு
இம்மாநாட்டில் 81 பேர் கொண்ட புதிய மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டு தலைமைக்குழு தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்ற மாநிலக்குழுக் கூட்டத்தில் மாநிலச் செயலாளராக ஜி. ராமகிருஷ்ணன் மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் உட்பட 15 பேர் கொண்ட மாநில செயற்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.
மாநில செயற்குழுமாநில செயற்குழு உறுப்பினர்களாக டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி.சம்பத், கே. பாலகிருஷ்ணன், கே. தங்கவேல், ப. செல்வசிங், எம்.என்.எஸ். வெங்கட்டராமன், எஸ். நூர்முகமது, ஏ. லாசர், பெ. சண்முகம், என்.குணசேகரன், க. கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலக்குழுவிற்கு முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா உள்ளிட்ட 6 சிறப்பு அழைப்பாளர்களும், 2 அழைப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமையிலான மாநில கட்டுப்பாட்டுக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.விசாகப்பட்டினத்தில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டிற்கு 50 பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநிலக்குழு, அகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் பட்டியல்







மக்கள் விரோத-மதவாத பாஜக அரசு அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத அதிமுக அரசு மாற்றுக் கொள்கைகளை முழங்கும் மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு இயக்கம்


சிபிஎம் மாநில மாநாடு தீர்மானம்
 

(ஆர்.உமாநாத்-என்.வரதராஜன் நினைவரங்கம் )சென்னை, பிப். 19-தமிழக மக்களின் நலன் காக்க அணி திரள்வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 21வது மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.மக்களை கசக்கிப்பிழியும் தாராளமயக்கொள்கைகள் மற்றும்மதவெறியின் கலவையாக செயல்படும் மோடி தலைமையிலான பாஜக அரசை எதிர்த்தும், தமிழக மக்களின் வாழ்வில் எந்த மாற்றத் தையும் ஏற்படுத்தாத அதிமுக அரசின் கொள்கைகளை அம்பலப் படுத்தியும், மக்கள் நல்வாழ்வுக்காக உறுதியோடு போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாற்றுக்கொள்கைகளை விளக்கியும் ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் மாபெரும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது என மாநில மாநாடு தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பான தீர்மானத்தை மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் முன்மொழிய, மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் வழிமொழிய, மாநாடு ஏகமனதாக நிறைவேற்றியது. தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி தனிப்பெரும்பான்மையுடன் மத்திய ஆட்சியில் அமர்ந்த பாஜக, காங்கிரஸ் பின்பற்றிய நவீன அதே தாராளமயக் கொள்கைகளை மிகத்தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. கடந்த 25 ஆண்டுகளாக மத்திய ஆட்சியாளர்களால் செயல்படுத்தப்படும் தாராளமய - தனியார்மயக் கொள்கைகளால் ஏழை,எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மத்தியதர வர்க்கத் தினர், சிறு உடைமையாளர்கள், வர்த்தகர்கள் என மிகப் பெருவாரியான மக்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டை நிறைவு செய்து பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உரையாற்றினார்.
  
சிபிஎம் மாநில மாநாட்டு தீர்மானங்கள்...

தமிழக ரயில்வே-புறக்கணிக்கும் மோடி அரசு
பாஜகவின் மோடி அரசு பதவி ஏற்றபின்புதிய ரயில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப் போவதில்லை என்றும், ஏற்கனவே ஒப்புதல் அளித்து நிதி நிலை அறிக்கைகளில் சேர்க்கப்பட்ட திட்டங்களை முடிக்கவே முன்னுரிமை தரப்படும் என்றும் அறிவித்தது. நாடு முழுவதும் மக்கள் கோரிக்கைகளை ஏற்று பல புதிய ரயில் பாதை,
அகலப்பாதை, இரட்டைப் பாதை திட்டங்களை ஆய்வு செய்துதிட்ட மதிப்பு உட்பட முடிவு செய்யப்பட்ட பலதிட்டங்களை கிடப்பில் போட்டு 2014 செப்டம்பர் 24 அன்று அறிவிப்பை வெளியிட்டது.தமிழகத்தைப் பொறுத்தவரை அப்படிப் பட்ட 24 திட்டங்களை கைவிடும் முடிவை அது அறிவித்துள்ளது.
கைவிடப்படும் புதிய ரயில் பாதை திட்டங்கள்
சென்னையிலிருந்து போரூர் வழியாக ஸ்ரீபெரும்புதூர்; ஆவடி - ஸ்ரீபெரும்புதூர்; இராமநாதபுரம் - தனுஷ்கோடி; அரியலூர் - தஞ்சாவூர்; திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி வழியாக கடலூர்; மயிலாடுதுறை - திருக்கடையூர் - தரங்கம்பாடி - திருநள்ளார் - காரைக்கால்; ஜோலார்பேட்டை - ஓசூர் கிருஷ்ணகிரி தர்மபுரி இணைப்புடன்; சத்தியமங்கலம் - மேட்டூர்; ஈரோடு - சத்திய மங்கலம்; சத்தியமங்கலம் - மங்களூர்; மொரப்பூரிலிருந்து தர்மபுரிக்கு மூக்காணூர் வழி யாக; மதுரை - காரைக்குடிக்கு மேலூர், திருப்பத் தூர் வழியாக; திருமானூர் வலம்புரி வழியாக தஞ்சை - அரியலூர்; சென்னைக்கும் வில்லிவாக்கத்துக்கும் இடையே 5வது மற்றும் 6வது பாதை; வில்லிவாக்கம்
- காட்பாடி புதிய பாதை; திண்டிவனம் - ஜோலார்பேட்டை; போடிநாயக்கனூர் - கோட்டயம்; மதுரை - போடிநாயக்கனூர் - கோட்டயம்; இராமேஸ் வரம் - தனுஷ்கோடி; காரைக்கால் - சீர்காழி; இராமநாதபுரம் வழியாக காரைக்குடி - தூத்துக்குடி; தூத்துக்குடி வழியாக இராம நாதபுரம் - கன்னியாகுமரி ஆகிய அனைத்தும் கைவிடப்படுகின்றன.
சென்னை - கன்னியாகுமரி இரட்டைப் பாதை திட்டம்
சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே மின்மயத்துடன் கூடிய இரட்டைப் பாதைத் திட்டம் மிக முக்கியமானதாகும். இதில் செங்கல்பட்டு வரை இரட்டைப் பாதைஉள்ளது. செங்கல்பட்டு முதல் விழுப்புரம் வரை இரட்டைப் பாதை முடியும் தருவாயில் உள்ளது. விழுப்புரம் முதல் திண்டுக்கல் வரை 273 கி.மீக்கு இரட்டைப் பாதை வேலை ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. ரூ .1300 கோடி திட்டத்தில் இன்னும் ரூ. 700 கோடி தேவைப்படுகிறது. அது விரைந்து முடிக்கப் போதிய நிதி ஒதுக்க வேண்டும்.
மதுரையிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக் கும்; நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரத் துக்கும் 245 கி.மீ தூரம் மின் மயத்துடன் கூடியஇரட்டைப் பாதை போட கள ஆய்வு முடிந்து ரூ.1916 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட் டுள்ளது. இந்தத் திட்டம் நிறைவேறினால் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கும் திருவனந்தபுரத்துக்கும் இரட்டைப் பாதை உருவாகி ஏராளமான ரயில் வண்டிகள் தாமதமின்றி ஓட வழி வகுக்கும். ஆனால் பாஜக அரசு இந்த திட்டத்தையும் புதிய திட்டமாக கருதுவதால் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. நடைமுறையில் அதுவும் கிடப்பில் போடப்படும்.
நடப்பில் உள்ள திட்டங்கள்
பாஜக அரசு புதிய திட்டங்களை மேற் கொள்ள மாட்டோம்; நடப்பில் உள்ள திட்டங் களை விரைந்து முடிக்க முன்னுரிமை அளிப் போம் என்று அறிவித்தாலும் தமிழகத்தின் நடப்பில் உள்ள பல புதிய பாதைத் திட்டங் களையும், சில அகலப் பாதை மற்றும் இரட்டைப் பாதை திட்டங்களையும், கைவிட வும் சிலவற்றை மாநில அரசு நிதி அளித்தால் தான் மேற்கொள்ள முடியும் என்றும் அறிவித் துள்ளது.ஈரோடு - பழனி புதிய பாதை; திண்டி வனம் செஞ்சி - திருவண்ணாமலை; திண்டிவனம் - வாலாஜாரோடு - நகரி புதிய பாதைதிட்டத்தில் திண்டிவனம் -
வாலாஜா ரோடு பாதை; மதுரையிலிருந்து அருப்புக் கோட்டைக்கு தூத்துக்குடி வழியாக புதிய பாதையில் மீளவிட்டான் - மேல் மருதூர் தவிர மற்றவை; சின்ன சேலம் - கள்ளக்குறிச்சி பாதை; மன்னார்குடி - பட்டுக் கோட்டை; தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை புதிய பாதை; மதுரை - போடிநாயக்கனூர் அகலப்பாதை ஆகிய வற்றை மாநில அரசு 50 சதவீத நிதி தரவில்லை என்றால் கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தாம்பரம் - செங்கல்பட்டு 3 வது பாதைத் திட்டத்தையும் கைவிட முடிவுசெய்துள்ளது.
இருகூர் - போத்தனூர் இரட்டைப் பாதைத் திட்டமும் கைவிடப்படு கிறது.
சுமை ஏற்றி பழிபோட்டுத் தப்பிக்கும் தந்திரம்
மாநில அரசின் மீது சுமையை ஏற்றி விட்டு, அது முடியாத போது மாநில அரசின் மீது பழிபோடும் திட்டமே இது என்று இம்மாநாடு சுட்டிக் காட்ட விரும்புகிறது. இவ்வளவு பெரிய நாட்டின் ரயில் வளர்ச்சித் திட்டங்களை ரயில்வே துறை மட்டுமோ அல்லது மாநில அரசோ நிறைவேற்றுவது சாத்தியமல்ல. மக்கள் சீன அரசு, ரயில்வே துறையில் ஆண்டுதோறும் ரூ.7 லட்சம் கோடி முதலீடு செய்வதைப் போல இந்தியாவிலும் மத்திய அரசுதான் ரயில் வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். பல லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வர வேண்டிய வருவாயை கார்ப்பரேட்டுகளுக்கு விட்டுக் கொடுக்கும் பாஜக அரசு,
காங்கிரஸ் அரசைப் போலவே பணம் இல்லை என்ற காரணத்தைக் கூறித் திட்டங்களைத் தட்டிக் கழிப்பதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. கறுப்புப் பணம் ரூ.28 லட்சம் கோடி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. 100 நாளில் அதைக் கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் தரப்போவதாக தேர்தல் வாக்கு றுதி அளித்த மோடி அரசு, பணம் இல்லை என்று கூறும் காரணத்தை ஏற்க முடியாது. எனவே மத்திய அரசு, சாக்குப் போக்குகளைக் கைவிட்டு ரயில்வே வளர்ச்சியில் - குறிப்பாக தமிழக ரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்கு வரும் ரயில்வே நிதி நிலை அறிக்கையில் போதிய நிதி ஒதுக்கீடு செய்திட இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது. தமிழக அரசும், மாநிலத்தில் நிறைவேற்ற வேண்டிய ரயில்வே திட்டங்களை மத்திய அரசிடம் வலுவாக வற்புறுத்த வேண்டுமென மாநில மாநாடு கேட்டுக் கொள்கிறது.(தீர்மானத்தை ரயில்வே அரங்கம் சார்பில் ஜானகிராமன் முன்மொழிந்தார்.)

 தொழிலாளர் விரோத சட்டத்திருத்தங்களை 
திரும்பப் பெறுக!


மத்தியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த உடனேயே மத்தியிலும், இவர்கள் ஆளும் மாநிலங்களிலும் முழுக்க முழுக்க முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அவசர கதியில் நடவடிக்கைகளில் இறங்கினர்.
உரிமை பறிக்கும் திருத்தங்கள் தொழிற்சாலை சட்டம், வேலை பழகுநர் சட்டம், குறைந்த பட்ச ஊதியச் சட்டம், தொழிலாளர் சட்டங்கள் (பேரேடுகள் பராமரிப்பு மற்றும் அரசுக்கு ஆண்டறிக்கைகள் சரிபார்ப்பதிலிருந்து விதி விலக்களிக்கும்) திருத்த மசோதா2011,
சிறு தொழிற்சாலை சட்டம் 2014 ஆகியவை இதில் அடங்கும். ராஜஸ்தான் பிஜேபி அரசு இதற்கு வெள்ளோட்டமாக தொழில்தகராறு சட்டம் 1947, ஒப்பந்த தொழிலாளர்(ஒழுங்கமைப்பு மற்றும் ஒழித்தல்) சட்டம் 1970 மற்றும் தொழிற்சாலை சட்டம் 1948 ஆகியவற்றில் தொழிலாளிகளின் உரிமைகளை பறிப்பதற்கான திருத்தங்களை மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.நமது நாடாளுமன்றத்தில் வேலைபழகுநர் சட்டமும், பேரேடுகள் பராமரிப்பிலிருந்து விலக்களிக்கும் சட்டங்களுக்கு தான் திருத்தங்கள் முன்மொழியப்பட்டு, இடதுசாரிகள் எதிர்ப்புக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளன. சில சட்ட திருத்தங்கள் அவையில் அறிமுக நிலையில் உள்ளன. இதற்கிடையில், ராஜஸ்தானைப் பின்பற்றி பிரதமர் அலுவலகத்திலிருந்து மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளன.
வெறும் ரூ.500 அபராதம்!
இந்த திருத்தங்கள் - மிகை நேரப்பணியை ஒரு காலாண்டிற்கு நேரடியாக நூறு மணிநேரம் (தற்போது ஐம்பது மணி நேரம்) ஆக்குவதற்கும் , மாநில அரசுகள் “பொது நலன்” கருதி 125 மணிநேரம் ஆக்கவும் வழிவகை செய்கிறது. மேலும், பணிக்காக பத்தரை முதல் 12 மணி நேரம் வரை பணியிடத்தில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பெண்தொழிலாளிகளை இரவு ஷிப்ட்களில் பாதுகாப்பு அற்ற முறையில் பணியமர்த்தவும் வகை செய்கிறது. அப்ரண்டிஸ் சட்டத்தை தற்போது மீறும் முதலாளிகளுக்கு சிறைத் தண்டனை உட்பட பல தண்டனைகள் வழங்கமுடியும். ஆனால் தற்போதைய திருத்தங்கள் இவை அனைத்தையும் நீக்கி விட்டு ரூ.500/- அபராதத்தோடு நின்றுவிடுகிறது.
குடும்பத்தின் குறைந்தபட்ச தலை அடிப்படையில் குறைந்த பட்ச ஊதியம் தீர்மானிக்கப்படவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும், 15வது இந்திய தொழிலாளர் மாநாட்டின் பரிந்துரைகளையும் அளவுகோலாக கொள்ளவேண்டும் என்ற ஒருமித்த முடிவுக்கு விரோதமாக தேசிய அடிமட்ட சம்பளம்(சூயவiடியேட குடடிடிச டநஎநட றயபந) என ஒரு அற்பத் தொகையை குறைந்த பட்ச ஊதியமாக்க முயற்சிக்கிறது. இந்த திருத்தங்கள் அனைத்தும் முதலாளிகள் தன் விருப்பத்திற்கு ஏற்ப (லாபத்திற்கு ஏற்ப) தொழிலாளர்களை ‘அமர்த்த அல்லது துரத்த’ வழியமைத்து கொடுப்பது தவிர வேறொன்றுமில்லை.
இடையூறாக உள்ளதாம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெருமுதலாளிகள் நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியாவில் உள்ள தொழிலாளர் சட்டங்கள் இடையூறாக உள்ளது என தொடர்ந்து கூறி வருகின்றனர்.இது கடுகளவும் உண்மையல்ல.உலக நிதி நெருக்கடிக்கு முந்தைய இந்தியாவின் வளர்ச்சி விகிதம் (ழுனுஞ) 8.5 சதவிதத்தைத் தாண்டி இரட்டை இலக்கை எட்டுமென பேசப்பட்ட காலங்களில் எல்லாம் இந்த சட்டங்கள் இருந்தன.இன்னொருபுறம், நமது நாட்டில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மத்திய தொழிலாளர் சட்டங்களும், நூற்றுக்கணக்கான மாநில சட்டங்களும் இருந்தாலும் இவை அமலாவதைவிட மீறப்படுதலே அதிகம் என்பதை அரசு புள்ளிவிவரங்களும்-
ஐஎல்ஓ ஆய்வுகளும் கூறுகின்றன.பெரும்பான்மையான தொழிலாளர்கள் பணியாற்றும் முறைசாரா தொழில்களில் தொழிலாளர் சட்டங்கள் தற்போதும் அமலாவதில்லை. தொழிலாளர் சட்டங்கள் அமலாக வேண்டிய ஆலைத்தொழிலாளர்களில் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்களை சட்ட வரம்பிற்கு வெளியே தள்ளும் முயற்சிதான் இச்சட்டத்திருத்தங்கள்.
கிணற்றில் போட்ட கல்
நாட்டின் 43,44 மற்றும் 45வது முத்தரப்பு தொழிலாளர் மாநாடுகள் ஏற்கனவே ஏகமனதாக நிறைவேற்றிய குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,000, போனஸ், பி.எப் உச்சவரம்புகளை நீக்குவதற்கான பரிந்துரைகள், கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.ஆகவே, உள்நாட்டு மூலதனத்திற்கும்,வெளிநாட்டு மூலதனத்திற்கும் கதவுகளைத் திறந்துவிடும் போக்கின் ஒரு பகுதியாகவே இந்த தொழிலாளர் சீர்திருத்தம் என்ற இந்த சட்டதிருத்த முன்மொழிவுகளும் நிறைவேற்றப்பட்டதும் அமைந்துள்ளது. எனவே, தொழிலாளர் நலன்களுக்கு விரோதமான சட்டதிருத்தங்களை திரும்பப் பெற வேண்டுமென மத்தியஅரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது மாநில மாநாடு கோருகிறது.இந்திய தொழிலாளி வர்க்கம் உதிரம் சிந்தி பெற்ற உரிமைகளை பறிக்க நினைக்கும் பிஜேபி அரசின் தொழிலாளர் வர்க்க விரோத முயற்சியை முறியடிக்க தொழிலாளி வர்க்கம் மேற்கொள்ளும் அனைத்து போராட்ட முயற்சிகளையும் இம்மாநாடு வரவேற்கின்றது.
உழைப்பாளிகளின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு தனது உளப்பூர்வமான ஆதரவைத் தெரிவிப்பதோடு, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும்இந்த திருத்தங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்றும் உறுதியேற்கிறது.(தீர்மானத்தை எம்.ஆனந்தன் முன்மொழிய, லீமாறோஸ் (கன்னியாகுமரி) வழிமொழிந்தார்)
 
இன்சூரன்ஸ்,ரயில்வே,பாதுகாப்பு துறையில் 
அந்நியரை எதிர்ப்போம்!

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை 49 சதவீதமாக அதிகரிக்கவும், அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கு வழிவகை செய்வதற்குமாக மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) 21வது மாநில மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.நாடாளுமன்றத்தில் 6 ஆண்டுகளாக நிலுவையிலேயே உள்ள இன்சூரன்ஸ் சட்டத் திருத்த மசோதா குறித்த விவாதத்தை அங்கு நடத்தாமல், குளிர்காலக் கூட்டத் தொடர் முடிந்த மறுநாளே அவசரச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயக விரோதமானது ஆகும்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இந்திய வருகையை முன்னிட்டு பன்னாட்டு மூலதனத்தை மகிழ்விக்க எடுக்கப்பட்ட அரசியல் முடிவே இது. 2008- உலக நெருக்கடிக்குப் பின்னர் அமெரிக்காவிலும், வளர்ந்த நாடுகளிலும் பன்னாட்டு வங்கிகளும், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் பல திவாலாகின. இந்தியாவில் டாட்டாவோடு கூட்டுத்தொழிலில் ஈடுபட்ட அமெரிக்கன் இண்டர்நேசனல் குரூப்(ஏ.ஐ.ஜி) திவாலின் விளிம்புக்கு சென்ற போது அமெரிக்க அரசாங்கமே அதன் 80 சதவீதப் பங்குகளை வாங்கி காப்பாற்றியது.
ரூ.11 லட்சம் கோடி கொடுத்த எல்ஐசி
அந்நிய முதலீடு வருகை இந்திய அரசின் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கான நிதி திரட்டலுக்கு உதவும் என்கிற வாதத்திற்கு எந்த அடிப்படையும் இல்லை. 11-வது ஐந்தாண்டு திட்டத்திற்கு எல்.ஐ.சி மட்டும் அளித்த தொகை ரூ.7,04,000 கோடிகள். 12 வது திட்டத்தின் முதல் இரண்டு ஆண்டுகளிலேயே ரூ.4,50,000 கோடிகளை எல்.ஐ.சி அளித்துள்ளது. ஆனால் அந்நிய முதலீடு 26 சதவீதம் வரை அனுமதிக்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இன்சூரன்ஸ் துறைக்கு வந்துள்ள அந்நிய முதலீடுகள் ரூ.7500 கோடிகளுக்கும் கீழேதான்.
எனவே இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவை அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் பலப்படுத்துவதுதானே தவிர அந்நிய முதலீட்டு அதிகரிப்பல்ல என இம்மாநாடு சுட்டிக் காண்பிக்கிறது.
டிசைகளுக்குப் போகாத தனியார்இன்சூரன்ஸ் பரவலாக்கலுக்கு வழிவகுப்பதே போட்டியை ஊக்குவிப்பதன் நோக்கம் என்பது அரசின் வாதம். ஆனால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கிராமங்களுக்கோ, குடிசைகளுக்கோ போகவில்லை என்பதுதான் போட்டி அனுமதிக்கப்பட்ட 14 ஆண்டு கால அனுபவம். ஓராண்டு காலத்தில் எல்.ஐ.சி புதிய அலுவலகங்களைத் திறந்துள்ள சிற்றூர்களின் எண்ணிக்கை 1313. இதே காலத்தில் 24 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூடியுள்ள கிளைகள் 732. ஏற்கனவே அந்த மூன்று முக்கியமான அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் - அமெரிக்காவின் ஏ.ஐ.ஜி, ஆஸ்திரேலியாவின் ஏ.எம்.பி, நெதர்லாந்தின் ஐ.என்.ஜி- இந்திய இன்சூரன்ஸ் கூட்டுத்தொழிலை விட்டு வெளியேறிவிட்டன. லாபம் மட்டுமே நோக்கமாகக் கொண்ட அந்நிய முதலீடுகள் இன்சூரன்ஸ் பரவலாக்கலுக்கு வழிவகுக்கவே முடியாது என்பதை இந்திய அனுபவத்தில் இருந்தே இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.
10 மடங்கு அதிகரிப்பு
போட்டி வந்தால் புதிய இன்சூரன்ஸ் திட்டங்கள் கிடைக்கும்; பிரிமியம் குறையும் என்பதெல்லாம் உண்மையல்ல என்பதே அனுபவம். டூ வீலர், ஆட்டோ, அரைபாடி லாரி போன்ற சாமானிய மக்களின் பயன்பாட்டிற்கான வாகனங்களின் மூன்றாவது நபர் காப்பீட்டிற்கான பிரிமியங்கள் தனியார்கள் அனுமதிக்கப்பட்ட பின்னர் 10 மடங்கு அதிகரித்துள்ளன. தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மீதான புகார்களின் விகிதம் 22 பாலிசிகளுக்கு 1 என்கிற அளவுக்கு - மொத்த புகார்கள் 2,89,336- உள்ளன. எல்.ஐ.சியோ 99 சதவீத உரிமப் பட்டுவாடாவோடு உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது.
காப்பீட்டுத் துறையில் நாடு முழுவதும் 12 லட்சத்து 75ஆயிரம் முகவர்கள் ஆயுள் காப்பீட்டு கழகத்தை தங்களின் வாழ்வாதாரத்துக்காக நம்பி செயல்பட்டு வருகிறார்கள். பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை பலப்படுத்துவதே இவ்வளவு எண்ணிக்கையிலான முகவர்களின் வாழ்வுரிமையை பாதுகாப்பதாக இருக்கும். அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக இணைத்து ஒரே நிறுவனமாக உருவாக்க வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
சீரழிக்கப்படும் பிஎஸ்என்எல்
இதே போல இந்திய நாட்டின் இதர துறைகளிலும் இதே அனுபவத்தையே அந்நிய நேரடி முதலீடுகள் ஏற்படுத்தியுள்ளன. மின்சாரத்துறையில் வந்த அந்நிய நிறுவனங்கள் என்ரான், ஏஇஎஸ் கார்ப்பரேசன் போன்றவை தோல்வியைத் தழுவின. பிஎஸ்என்எல் நிறுவனத்தை துவக்க காலங்களில் செல்பேசித் துறையில் தடுத்து அந்நிய முதலீட்டை ஊக்குவித்தபோது உள்ளே வரும் அழைப்புகளுக்கு கூட கட்டணங்கள் இருந்தன. இப்போதும் பிஎஸ்என்எல் நிறுவனத்தைச் சீரழிக்கிற முயற்சிகள் தொடர்கின்றன. ரயில்வே துறையில் 100 சதவீதம் அந்நிய மூலதனத்திற்கு மத்தியஅரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவிற்குள் அந்நிய வங்கிக்கிளைகள் திறப்பதற்கு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
அனைவருக்குமான வங்கிச்சேவை என்கிற இலக்குகளுக்கு இன்றும் பொதுத்துறை வங்கிகளே உதவுகின்றனவே தவிர அந்நிய, தனியார்களின் பங்களிப்பு ஏதுமில்லை. பொதுத்துறை நிதிகளை உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும். 2014 டிசம்பர் 22ந்தேதி கிராம வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவும் கைவிடப்படவேண்டும். இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் உள்ளதென்று அமைச்சக மட்டங்களிலுள்ள கருத்துக்களையும் மீறி பாதுகாப்புத்துறையில் அந்நிய முதலீடு ஊக்குவிக்கப்படுகிறது. ரயில்வே துறையிலும் அனுமதிக்கப்படுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வரும் அந்நிய முதலீடுகள் சமூக நோக்குடனான செயல்பாட்டிற்கு எதிராக உள்ளன. புதிய தொழில் நுட்பத்தைப் பெரிதாகக் கொண்டு வரவில்லை. வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. ’ மேக் இன் இந்தியா’ முழக்கம் இந்திய தொழிலாளர்களின் உரிமைகளையும், பயன்களையும் பறிக்கும் என்பதன் நளினமான வடிவமே ஆகும். மத்தியில் அமைந்துள்ள புதிய அரசு அந்நிய முதலீடுகளை ஊக்குவித்து பொதுத் துறைகளுக்கு எதிரான கொள்கைகளை வகுக்கும் வேளையில்அதற்கு எதிரான திரட்டல்களையும், கருத்துருவாக்கத்தையும் மேற்கொள்ளுமாறு அனைத்து உழைப்பாளி மக்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 21வது மாநில மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.(தீர்மானத்தை விஜயா (மதுரை) முன்மொழிந்தார்.
சங்கர் (காஞ்சிபுரம்) வழிமொழிந்தார்.)

 சிபிஎம் மாநாட்டில் மக்கள் 
 வெள்ளம்...

மாநாட்டுப் பணிகளில் தீக்கதிர் குழு...சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்21வது மாநில மாநாட்டின் செய்திகளையும், புகைப்படங்களையும் வழங்கிய குழுவினர் அ.குமரேசன், அ.விஜயகுமார், சி.ஸ்ரீராமுலு, செ. கவாஸ்கர், ம.மீ. ஜாபர்உசேன், எஸ். ராமச்சந்திரன், சி. முருகேசன், வின்சி, வீரபத்ர லெனின், மணிசுந்தரம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 21வது மாநாடு பிப்ரவரி 19 வியாழனன்று சென்னையில் பேரெழுச்சியுடன் நிறைவுபெற்றது. நிறைவு நாளில் ராயப்பேட்டை மருத்துவமனை எதிரில் (ஒய்எம்சிஏ திடல்) தோழர் வி.பி.சிந்தன் நினைவாக பெயரிடப்பட்ட திடலில் காலை 10 மணி முதலே ஆயிரமாயிரமாய் மக்கள் குவிந்தனர்.
கலை, இசை, நாடகம், பட்டிமன்றம் என ஏராளமான குழுக்களின் நிகழ்வுகள் அரங்கேறிய வண்ணம் இருந்தன.தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் செங்கொடி ஏந்தி சாரை சாரையாக, குடும்பம் குடும்பமாக தோழர்கள் பொது மாநாட்டு திடலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.இந்நிலையில், பிரதிநிதிகள் மாநாடு முடிவடைந்து, மாலை 4 மணியளவில் வி.பி.சிந்தன் திடலில் பொது மாநாடு நடைபெற்றது.
முன்னதாக மாபெரும் செந்தொண்டர் அணிவகுப்பும் நடைபெற்றது.பொதுக்கூட்டத்திற்கு வரவேற்புக்குழுச் செயலாளர் ஏ.பாக்கியம் தலைமையேற்றார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் சீத்தாராம் யெச்சூரி, பிருந்தா காரத், கே.வரதராசன், ஏ.கே.பத்மநாபன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், கே.பாலகிருஷ்ணன், பி.சம்பத் மற்றும் ப.செல்வசிங், க.பீம்ராவ், எல்.சுந்தரராஜன், கே.கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் உரை நிகழ்த்தினர்.

இலங்கைத்தமிழ் மக்களுக்கு அதிகபட்ச சுயாட்சி அதிகாரம் வழங்குக!

அரைநூற்றாண்டுக்கு மேலாக இலங்கைத்தமிழர்கள் அனுபவித்து வரும் வலியும், வேதனைகளும் உலகறிந்தது. இலங்கை ராணுவம், தமிழ் மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதலை நடத்தியது. தமிழ் மக்களின் வீடுகள், வியாபார மற்றும் தொழில்நிறுவனங்கள் குண்டு வீசித் தகர்க்கப்பட்டன. குடியிருப்புகள், மருத்துவமனைகள் , பள்ளிக்கூடங்கள் மற்றும் கோயில்கள் மீது விமானத்தாக்குதல் நடத்தி பல்லாயிரம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். பச்சிளங்குழந்தைகளும் இலங்கை ராணுவத்தின் தாக்குதலிலிருந்து தப்பவில்லை. வாழ்விழந்த சில லட்சம் தமிழ் மக்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள சொந்த நாட்டை விட்டு வெளியேறி தமிழ்நாடு உள்ளிட்டு பல நாடுகளுக்கு அகதிகளாகப் புலம் பெயர்ந்தார்கள்.மிகப்பெரும் மனிதப் பேரழிவுஇத்தாக்குதலின் உச்சகட்டமாக, முள்ளிவாய்க்காலில் 2009ம் ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே நடந்த இறுதிக்கட்டப் போரில் மிகப்பெரும் மனிதப்பேரழிவு ஏற்பட்டது.
உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 5 ஆண்டுகள் கடந்த பின்னரும், அதிகாரத்திலிருந்த ராஜபக்சே அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண துரும்பைக் கூட அசைக்கவில்லை. தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் நியமித்த ஆலோசனைக்குழுவின் அறிக்கை மீதும், இலங்கை அரசாலேயே நியமிக்கப்பட்ட போர் படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள ராஜபக்சே அரசு மறுத்து விட்டது.
தமிழ் மக்கள் சொந்தப்பகுதிகளில் குடியமர்த்தப்பட்டு மறுவாழ்வு அளிப்பது, சிங்கள மக்களுக்கு இணையான சமஉரிமை வழங்குவது, தமிழர் பகுதியிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெற வைப்பது போன்ற எந்த நடவடிக்கையையும் ராஜபக்சே அரசு மேற்கொள்ள மறுத்து விட்டது. வடக்கு மாகாணத்தில் பதவியேற்ற விக்னேஸ்வரன் அரசுக்கு குறைந்தபட்ச அதிகாரங்களைக் கூட வழங்கவில்லை.
இத்தகைய நடவடிக்கைகள் மூலம் சிங்கள வெறியை கிளப்பி, மூன்றாவது முறையாக தனது குடும்பத்தின் ஆட்சியை நீடித்துக் கொள்வதற்கான முயற்சிகளை ராஜபக்சே மேற்கொண்டார்.நடைபெற்ற அதிபர் தேர்தலில் சொந்த கட்சியில் ஏற்பட்ட பிளவு, கடைபிடித்த மக்கள் விரோதக் கொள்கைகளால் உள்நாட்டில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி, தமிழர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களது எதிர்ப்பு போன்றவைகளால் ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டார்.
அவரது அரசில் அமைச்சராக இருந்த மைத்ரிபால சிறிசேன எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுள்ளார். சிறிசேன அரசின் நடவடிக்கைகள்புதிதாகப் பதவியேற்றுள்ள மைத்ரிபால சிறிசேன அரசு மேற்கொண்டுள்ள சில நடவடிக்கைகள் முக்கியத்துவம் உடையதாகும். வடக்கு மாநில அரசின் ஆளுநராகவும், தலைமைச் செயலாளராகவும் இருந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மாற்றப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
13வது அரசியல் சட்டத் திருத்தம் கூடுதல் அதிகாரத்துடன் அமல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அறிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் பகுதியில் ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட்டு, பத்திரிகையாளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் அனைவருக்கும் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இலங்கையின் ஜனாதிபதி ஆட்சிமுறை மாற்றப்பட்டு நாடாளுமன்ற ஆட்சி முறைக்கான சட்டத்திருத்தம் 100 நாட்களில் நிறைவேற்றப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார். ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்ட பின் முதல் வெளிநாட்டுப் பயணமாக சிறிசேன இந்தியாவுக்கு வந்திருப்பதும், இந்திய அரசுடன் கூட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இருப்பினும் தமிழ் மக்கள் வாழ்நிலையும் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் பழைய நிலைமையே நீடித்து வருகிறது என்பது கவலைக்குரியதாகும். கடந்த பல பத்தாண்டுகளாக இலங்கைத்தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்டுள்ள கொடுமைகள்குறித்து இயற்கையாகவே தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த தாக்கமும், ஆழ்ந்த கவலையும் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வு கண்டிட பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் மாறுபட்ட வழிமுறைகளை வற்புறுத்தி வந்துள்ளது அறிந்ததே.நிரந்தரத் தீர்வுக்கு என்ன வழி? துவக்க காலத்திலிருந்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரங்களைக் கொண்ட தமிழ் மாநிலங்கள் உருவாக்கப்படவும், தமிழ் மக்களுக்கு சமத்துவ உரிமைகள் மற்றும் தமிழ்மொழிக்கு சமஅந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது.
இத்தகைய வழிமுறையே இலங்கைத்தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட உதவும் என்பதை கடந்தகால அனுபவங்கள் உணர்த்தியுள்ளன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்தப் பின்னணியில் இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வு காண கீழ்க்கண்ட அம்சங்களை இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அரசு நிறைவேற்ற வேண்டுமெனவும், அவைகள் நிறைவேற்றப்படுவதற்கு தற்போது ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலையை பயன்படுத்தி இந்திய அரசு ராஜிய ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-வது தமிழ்நாடு மாநில மாநாடு வலியுறுத்துகிறது.
அதிகபட்ச சுயாட்சி அதிகாரம்1. இலங்கை அரசு நிறைவேற்றியுள்ள 13-வது அரசியல் சட்டத்திருத்தத்தை கூடுதல் அதிகாரத்துடன் செயல்படுத்திட வேண்டும். தமிழ் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகபட்ச சுயாட்சி அதிகாரங்கள் அளித்திட வேண்டும். தமிழர் வாழும் பகுதியில் ராணுவம் வாபஸ் பெற்று மாநில அரசின் நிர்வாகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும்.சிங்களக் குடியிருப்புகளை அப்புறப்படுத்துக!2. சிங்கள மக்களுக்கு நிகராக தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும். குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் மீள் குடியமர்த்தப்பட வேண்டும். அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும்.
அவர்களது சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வேலை, கல்வி, சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும். தமிழர் பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட சிங்கள குடியிருப்புகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். ஒட்டுமொத்தத்தில் இலங்கையில் வாழும் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் வாழ்விற்கான அனைத்து உரிமைகளும் உறுதி செய்யப்பட வேண்டும்.
விசாரணை நடத்துக!3. தொடர்ந்து இலங்கைத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட எண்ணற்ற தாக்குதல்கள் குறித்தும் 2009 மே மாதம் நடந்த இறுதிக்கட்ட போரில் ஏற்பட்ட மனிதப் பேரழிவு மற்றும் மனித உரிமைகள் மீறல் குறித்து முழுமையான, சுதந்திரமான, நம்பகத்தன்மை கொண்ட சர்வதேச, நீதி மற்றும் மனித உரிமை விவகாரங்களில் அனுபவம் பெற்றவர்களைக் கொண்ட உயர்மட்ட விசாரணைக்குழுவை இலங்கை அரசு அமைத்து விசாரிக்க வேண்டும்.
ஐ.நா. சபை பொதுச்செயலாளரின் ஆலோசனைக்குழு மற்றும் இலங்கை அரசு அமைத்த போர் படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்.ஐ.நா. அறிக்கை தாமதம் கூடாது4. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றம் சார்பில் மேற்கொண்ட விசாரணைக்குழு தனது அறிக்கையை தாமதிக்காமல் சமர்ப்பிக்க வேண்டும். இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்புவதில் அவசரம் கூடாது! தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்புவதில் அவசரம் காட்டக்கூடாது. சொந்த நாட்டுக்குத் திரும்ப விரும்புகிறவர்களுக்கு புனர்வாழ்வுக்கான உத்தரவாதமான ஏற்பாடுகளைத் செய்து தர வேண்டுமென இந்திய - இலங்கை அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-வது மாநாடு வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.நெஞ்சை உறைய வைக்கும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட இலங்கைத்தமிழ் மக்கள் கண்ணியமான வாழ்வு மேற்கொள்ளும் வகையில் அனைத்து உரிமைகளையும் உறுதிப்படுத்திட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டுமெனவும்,இதனை நிறைவேற்ற இந்திய அரசு ராஜிய ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டுமெனவும் தமிழக மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது தமிழ்நாடு மாநில மாநாடு வேண்டிக்கொள்கிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 21வது மாநாட்டில், மத்தியக் குழுஉறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் எம்எல்ஏமுன்மொழிய, மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி வழிமொழிய, நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதில் அவசரம் காட்டக்கூடாது. சொந்த நாட்டுக்குத் திரும்ப விரும்புகிறவர்களுக்கு புனர்வாழ்வுக்கான உத்தரவாதமான ஏற்பாடுகளைத் செய்து தர வேண்டும்.நெஞ்சை உறைய வைக்கும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட இலங்கைத்தமிழ் மக்கள் கண்ணியமான வாழ்வு மேற்கொள்ளும் வகையில் அனைத்து உரிமைகளையும் உறுதிப்படுத்திட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும்.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

சிபிஎம் மாநாடு எழுச்சித் துவக்கம்,செங்கொடி இயக்கத்திற்கே எதிர்காலம்!




தமிழக உழைக்கும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 21வது மாநாடு சென்னையில் திங்களன்று (பிப்.16) எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் தொடங்கியது.


தியாகிகள் நினைவுச் சின்னத்திற்கு தலைவர்களும் மாநாட்டுப் பிரதிநிதிகளும் அஞ்சலிசெலுத்திய பின்னர் காலை 10 மணிக்கு பொது மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற பொதுமாநாட்டில் மாநாட்டு வரவேற்புக்குழு தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான க.பீம்ராவ் வரவேற்றுப்பேசினார். அஞ்சலி தீர்மானத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் முன்மொழிந்தார். 

இதனைத் தொடர்ந்து மாநில மாநாட்டை தொடங்கிவைத்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் சிறப்புரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன் மாநாட்டை வாழ்த்திப்பேசினார். பொதுமாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், பிருந்தாகாரத், ஏ.கே.பத்மநாபன், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,

மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், கே.பாலகிருஷ்ணன், பி.சம்பத், சுதா சுந்தரராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத்துணைத்தலைவர் கே.சுப்பராயன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயற்குழு உறுப்பினர்கள், பிரதிநிதிகள், கட்சி ஊழியர்கள், பொதுமக்கள் என பெரும்திரளானோர் கலந்துகொண்டனர்.


 நன்றி தீக்கதிர்



புதன், 11 பிப்ரவரி, 2015

ஊழல் ஸ்ரீரங்கம் பிரச்சாரத்தில் உ.வாசுகி சாடல் அஸ்திவாரம் போட்டது திமுக கட்டடம் கட்டியது அதிமுக




ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரில் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிய உ.வாசுகி.அருகில் சிபிஎம் வேட்பாளர் கே.அண்ணாதுரை மற்றும் கே.முகமதலி உள்ளிட்டோர்.


திருச்சிராப்பள்ளி,பிப்.10-
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே. அண்ணாதுரையை ஆதரித்து திங்களன்று மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, அம்பேத்கர் நகர், அழகிரிபுரம், ரயில்வே பி கிராஸ், திருவானைக்காவல் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசிய தாவது:- ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக, திமுகவினர் பணம்கொடுத்து வாக்கு கேட்கவேண் டிய அவசியம் என்ன? சொல்வதற்கு ஒன்றும் இல்லாததால் பணத்தைக் கொடுத்து வாக்கை வாங்க முயற்சிக்கின்றனர். ஜெயலலிதாவின் இந்த நிலைக்கு விதியோ, சதியோ காரணம் இல்லை. இது அவர்கள் மதி போன வழியில் வந்தது. ஊழலுக்கு திமுக அஸ்திவாரம் போட்டது.
அதன்மேல் அதிமுக கட்டிடத்தை கட்டிவருகிறது. `திருமங்கலம் பார்முலா’வை தமிழகம் முழுவதும் தப்பாமல் அதிமுக செய்து வருகிறது. தமிழகத்தில் படித்த 90 லட்சம் பேருக்கு வேலை இல்லை. இது போன்ற பல அடிப்படையான பிரச்சனைகளைப் பேசாமல் பணம் கொடுத்து மக்களின் வாயை அடைத்து விடலாம் என்று நினைக்கின்றனர். தேர்தல் நேரத்தில் மோடி கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஒவ்வொரு ஏழைக்கும் ரூ.15 லட்சம் தருவேன் என்றார். ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் ஆகியும் ஒரு ரூபாய்கூட கொடுக்க வில்லை. மற்ற கட்சிகளுக்கு பொதுத்தொகுதியில் தலித்களை நிறுத்த தைரியம் உள்ளதா ? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே சாதி, மதம் பார்க்காமல் சட்டமன்றத்தில் மக்கள்பிரச்சனைகளை உரக்கப் பேசும் தகுதியுள்ள திறமையான, மக்களுக்காக உழைக்கக்கூடியவரை வேட்பாளராக தேர்ந்தெடுக்கிறது.
எனவே உங்களுக்காக உழைக்கக்கூடிய அண்ணாதுரைக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.வாக்கு சேகரிப்பின் போது மாநிலக்குழு உறுப்பினர் கே.முகமது அலி, புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இளஞ்செழியன், சம்பத், ஜெயபால், ரேணுகா, நடராஜன், சிபிஐ தலைவர்கள் சுரேஷ், திராவிடமணி, பீர்முகமது உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

வியாழன், 5 பிப்ரவரி, 2015



முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட உதவித்தொகையை உடனடியாக வழங்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

 

சனி, 31 ஜனவரி, 2015

UVASUKI: ஆர்.உமாநாத், பாப்பா உமாநாத் நினைவு ஸ்தூபி திறப்பு

UVASUKI: ஆர்.உமாநாத், பாப்பா உமாநாத் நினைவு ஸ்தூபி திறப்பு: திருச்சி பொன்மலை சங்கத்திடலில் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் ஆர்.உமாநாத், பாப்பா உமாநாத் நினைவு  ஸ்தூபியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

வெள்ளி, 30 ஜனவரி, 2015

ஆர்.உமாநாத், பாப்பா உமாநாத் நினைவு ஸ்தூபி திறப்பு




திருச்சி பொன்மலை சங்கத்திடலில் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் ஆர்.உமாநாத், பாப்பா உமாநாத் நினைவு
 ஸ்தூபியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் 
பிருந்தா காரத் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், 
மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்ட தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
திருச்சிராப்பள்ளி, ஜன.29-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தோழர்கள் உமாநாத், பாப்பாஉமாநாத் ஆகியோரின் நினைவு ஸ்தூபி திறப்பு நிகழ்ச்சி வியாழனன்று காலை திருச்சி பொன்மலை சங்கத்திடலில் நடந்தது.நிகழ்ச்சிக்கு மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். நினைவு ஸ்தூபியை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்களான உமாநாத், பாப்பா உமாநாத் இருவரும் இப்போது நம்முடன் இல்லை என்பது வருத்தமாக உள்ளது. பாப்பாவின் சிரிப்பும், உமாநாத்தின் முகபாவமும் என் கண்முன்னே நிழழாடுகிறது.
இவர்கள் இருவரும் பல்வேறு பாடங்களை நமக்கு கற்றுத்தந்த பல்கலைக்கழகமாக இருந்திருக்கிறார்கள். இருவரும் பல்வேறு விஷயங்களில் மாறுபட்ட தன்மைகொண் டவர்கள். தொழிலாளர்களின் நலனுக்கான அர்ப்பணிப்பு உணர்வுதான் இவர்களை ஒன்றிணைத்தது. புரட்சி என்ற இலக்கை முன்நிறுத்தி மனிதனை மனிதன் சுரண்டுகிற போக்கை எதிர்த்துப் போராடினார். நாம் தவறு செய்ய வாய்ப்பே இல்லை என்பதை உமாநாத் நமக்கு கற்றுத்தந்துள்ளார். பாப்பாவின் சுயேட்சையான சிந்தனை அனுபவங்களில் இருந்து நமக்கு பலவற்றை கற்றுத்தந்துள்ளார். ஒரு தொழிலாளி வர்க்க குடும்பத்தில் பிறந்து நமக்கு முன்னோடியாக இருந்துள்ளார்.தமிழக பெண்கள் முன்னேற்றத்திற்காக ஏராளமான பணிகளை செய்துள்ளார். அவரது பணி தமிழகத்து டன் நின்றுவிடவில்லை. துணிச்சல் தைரியம் ஆகிய குணங்கள் கொண்டவர் பாப்பா. எனக்கு மிகப்பெரிய உத்வேகம் உற்சாகம் கிடைக்க இந்த தலைவர்கள் காரணமாக இருந்துள்ளனர். சிந்தனை செயல் வாழ்க்கைஅனைத்திலும் இவர்கள் முழு கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தனர். இன்றைக்கு ஆளும் வர்க்கத்தால் தொடுக்கப்படும் பல்வேறு தாக்குதல்கள் கம்யூனிச சித்தாந்தத்திற்கு எதிரான போக்கு ஆகியவற்றை எதிர்கொள்ள இவர்களின் துணிச்சலும், உணர்வும் நமக்கு தேவை.
அவர்களது மகள்களையும் கம்யூனிஸ்ட்டுகளாக வளர்த்ததுதான் பெருமை அளிக்கும் விஷயம். இந்த நினைவுச்சின்னம் இந்தியா முழுவதும் இருக்கும் கம்யூனிஸ்ட்டுகளின் உணர்வால், உழைப்பால் எழுப்பப்பட்டது. இவர்கள் வழியில் நாம் செங்கொடியை உயர்த்திப் பிடிப்போம். என்றார்.
நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர் அமிர்தம், அகில இந்திய ஜனநாயக மாதர்சங்க மாநில பொதுச்செயலாளர் சுகந்தி, மாநில தலைவர் வாலண்டினா, தட்சிண ரயில்வே எம்ப்ளாய்ஸ் யூனியன் செயல்தலைவர் இளங்கோவன் ஆகியோர் பேசினர். முன்னதாக மாநகர் மாவட்ட செயலாளர் கே.அண்ணாதுரை வரவேற்றார். புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ்.இந்துராஜ் நன்றி கூறினார்.


அநீதியான சாதிய அமைப்புகளை மதங்கள் 

கெட்டிப்படுத்துகின்றன


கவுரவக்கொலைகள் எதிர்ப்பு மாநாட்டில் 

பிருந்தாகாரத் சாடல்





புதுக்கோட்டையில் நடைபெற்ற கவுரவக் கொலை எதிர்ப்பு மாநாட்டில் பிருந்தா காரத் உரையாற்றுகிறார். 
மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, 
மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் எம்எல்ஏ உள்ளிட்டோர் மேடையில் உள்ளனர்.
















புதுக்கோட்டை, ஜன.29-
சாதிய அமைப்புகளை கெட்டிப் படுத்தும் வேலைகளை மத அடிப் படைவாதிகள் செய்கின்றனர் என் றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப் பினர் பிருந்தாகாரத்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கவுரவக் கொலைகள் எதிர்ப்பு மாநாடு புதுக்கோட் டையில் புதன்கிழமையன்று நடை பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் பேசியதாவது:ஆண், பெண் இருவருக்கு இடையே இயல்பாக மலர்வது காதல். அது மனம் சம்பந்தப்பட்டது. சில சமயங்களில் தங்களது காதல் வேண்டாமென்று காதலர்கள் பிரிந்துவிடுவதும் நடப்பது உண்டு. இதில் வேறு நபர் உள்ளே நுழைவதற்கு இடமில்லை.
ஆனால், காதலர்கள் எடுக்கின்ற முடிவைத்தாண்டி வெளியி லிருந்து வரும் அரசியல் தலையீடு வெறுப்பாக மாற்றப்படுகிறது. கவுர வக்கொலை தானாக நடந்துவிடுவது கிடையாது. இதற்குப் பின்னால் அரசியல் வாதிகளின் வலுவான தலையீடு இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேடையிலிருந்து சொல்கிறோம். காதலர்களின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இதில் ஒரு போதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். சாதியை அல்லது மதத்தைத் தாண்டி இணையும் காதலர்களின் சவங்களில் நின்று ஓட்டுக் கேட்பது எங்கள் வழக்கமல்ல.ஹரியானாவில் சாதியின் பெயராலும், கர்நாடகம், உத்தரப்பிரதேச மாநிலங்களில் மதத்தின் பெயராலும் கவுரவக் கொலைகள் நடக்கின்றன. தமிழ்நாடு உள்ளிட்ட சில பகுதி களில் தாங்களுக்குள்ளாகவே சில அமைப்புகளை உருவாக்கி திட்ட மிட்டு இத்தகைய சதி வேலைகளில் ஈடுபடுகின்றனர்.பெரியார் பிறந்த தமிழகம் ஒரு காலத்தில் சமூக சீர்திருத்தத்திற்கான தளமாக இருந்தது.
இன்றுள்ள சில அரசியல் தலைவர்கள் பொதுமேடையில் பகிரங்கமாக சாதி பெரு மிதம் குறித்து பேசும் நிலை உள்ளது. இத்தகைய சூழலில் திராவிடக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் ஏன் மவுனம் சாதிக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். முற்போக்கான விசயம் குறித்து வாய்திறக்க மறுக்கும் இவர்கள் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குறித்தசண்டைகளில் மட்டுமே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.கவுரவக் கொலைகளுக்கு எதிரானப் போராட்டம் என்பது ஜனநாயகப் படுகொலைக்கு எதிரானப் போராட்டமாகும். சாதியும், தீண்டாமையும் இந்தியாவைப் பீடித்திருக்கிற சாபக்கேடாக உள்ளது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென் பதே எங்கள் லட்சியம். சாதிய முறையை ஒழித்துக்கட்டாமல் இது நிறைவேறாது என்பதில் உறுதி யாக இருக்கிறோம்.ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலின் பேரில் நடக்கும் மத்திய அரசு சாதிய கட்டமைப்பை பாதுகாப்பதற்கு மதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு இந்து பெண் இஸ்லாமிய இளைஞனைக் காத லித்தால் மிகப் பெரிய தாக்குதலை இந்த அமைப்புகள் நடத்துகின்றன.மத சடங்குகளைப் பயன்படுத் தாமல் திருமணம் செய்துகொள்ளும் உரிமையை சிறப்புத் திருமணச் சட் டம் வழிவகுக்கிறது. இத்தகைய திரு மணத்தில் ஆணோ, பெண்ணோ மதம் மாற வேண்டியதில்லை. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் இச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, கடினமான விசயமாக மாற்ற முயற் சிக்கிறார்கள். இத்தகைய திருத்தத்தின் காரணமாக மத்தியப் பிரதேசம் குவாலியரில் இந்துத்துவ சக்திகளின் சதியால் ஒரு பெண் தனியாக வாழும் அவலம் ஏற்பட்டுள்ளது.மத அடிப்படை வாதிகள் தங்க ளது மதத்தைச் சேர்ந்தவர்கள், தங்களது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டுமென்ற நோக்கில் திட்ட மிட்டுச் செயல்படுகின்றனர். எல்லா மதத்திலும் அடிப்படைவாதிகள் ஆணாதிக்கக் கட்டுப்பாட்டுக்குள் பெண் இருக்க வேண்டும் என நினைக் கிறார்கள். அன்பு செலுத்துவதையே மதங்கள் போதிக்கின்றன. இரண்டு அன்பு உள்ளங்களை வெறுப்பது மதத்திற்கு எதிரானது என்பதை அடிப்படைவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசியல் சக்திகளின் தூண்டுத லோடு கவுரவக் கொலைகள் நடப்பது வெட்கக்கேடான விசயம். சாதி யின் பெயரால், மதத்தின் பெயரால் மற்றும் காவல் துறையின் துணையால் கண்ணுக்குத் தெரியாத குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதை தடுக்காத அரசும், ஆட்சியாளர்களும் சேர்ந்து செய்கிற குற்றமாகத்தான் நான் பார்க்கிறேன்.இத்தகைய கொடுமையை தடுக்கும் வகையில் வலுவான சட்டங்கள் கொண்டுவர வேண்டுமென நாடாளு மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ச்சியான போராட் டங்களை நடத்தி வருகின்றோம். அதையே இந்த மேடையிலும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு பிருந்தாகாரத் தனது பேச்சில் குறிப்பிட்டார்.


பிள்ளைகளைக் கொலைசெய்வதில் என்ன 

கவுரவம் இருக்கிறது

உ.வாசுகி கேள்வி




புதுக்கோட்டை, ஜன.29 -
சாதிமறுப்புத் திருமணம் செய்பவர் களை கவுரவக்கொலை செய்கிறார்கள். பெற்ற பிள்ளைகளைக் கொலை செய்வ தில் என்ன கவுரவம் இருக்கிறது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி.புதுக்கோட்டையில் புதன்கிழமை யன்று நடைபெற்ற கவுரவக்கொலை எதிர்ப்பு மாநாட்டில் அவர் பேசியதாவது:இந்திய அரசியல் சாசனம் மனுதர்ம சட்டங்களோடு இணைந்ததாக இருக்க வேண்டும் என்று சொன்ன ஆர்எஸ்எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் தற் பொழுது மத்திய அரசு இருக்கிறது.
மனு தர்மம் சூத்திரனுக்கு கல்வி கூடாது என்றது. சொத்து இருக்கக்கூடாது என்றது. அவர்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எந்த சாதியில் இருந்தாலும் பெண்களை சூத்திரர் களாகவே கருதியது.சாதியப் படிநிலைகளை கெட்டியாகப் பற்றிநிற்கும் பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்கிறார்கள். தற்பொழுது பாடத்திட்டத்திலுள்ள தீண்டாமை ஒரு பாவச்செயல், அனை வரும் சமம் என்ற அம்சங்களை நீக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.இன்னும் ஒருபடி மேலே போய் இஸ்லாமியர்கள் வந்தபிறகுதான் தீண்டாமை யும் வந்தது என்கிறார்கள். மக்களை ஏமாற்ற நினைக்கும் இவர்கள் என்றைக் குமே ஆதாரங்களை முன்வைத்துப் பேசுவதில்லை. இட்டுக்கட்டியே கதையளக் கிறார்கள். சாதி என்ற ஏணிப்படி, ஒருபடியில் நிற்பவர் அடுத்த படிக்கு ஏற வோ, இறங்கவோ முடியாதபடிக்கு கெட்டி தட்டிப்போய் இருக்கிறது.சாதிமறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் தளிர்களை கவுரவக்கொலை செய்கிறார்கள்.
பிள்ளைகளை கொலைசெய்வதில் என்ன கவுரவம் இருக் கிறது. சமூகத்தில் சாதிமறுப்புத் திருமணங் கள் தாங்கமுடியாத குற்றமாகப் பார்க்கப்படுகிறது. பொதுவாக மக்களின் மனநிலை யிலேயே மாற்றம் வர வேண்டும். அதற்குதலித்துகளின் கையில் நிலம் வேண்டும்.
குறைந்தபட்ச கூலி வேண்டும். உயர் கல்விக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இவற்றோடு சேர்த்து பண்பாட்டுத் தளத்திலும் மாற்றம் வேண்டும் என்று குறிப்பிட்டார்.சாதிமறுப்புத் திருமணங்களை எதிர்க்கும் சாதிய அமைப்புகள் மீதும், பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றாத காவல்துறையினர் மீதும் களத்தில் நின்று தொடர்ச்சியாக போராட வேண்டிய கடமை கம்யூனிஸ்ட்டுகளுக்கு உண்டு. இவ்வாறு உ.வாசுகி தனது பேச்சில் குறிப்பிட்டார்.



வெள்ளி, 9 ஜனவரி, 2015

விஞ்ஞானிகளை கொச்சைப்படுத்துவதா? மோடி அரசுக்கு உ.வாசுகி கண்டனம்



புதுக்கோட்டை, ஜன.8-
புராதான காலத்தில் அறி வியல் கண்டுபிடிப்புகள் இருந்ததாகக்கூறி, நமது விஞ்ஞானி களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை கொச்சைப்படுத்துகிறது மோடி அரசு என குற்றம்சாட்டினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப் பினர் உ.வாசுகி.கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட 12-வது மாநாடு புதுக் கோட்டையில் நடைபெற்று வருகிறது.
மாநாட்டு பேரணி - பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய தாவது:-மோடி ஆட்சிக்கு வந்தபிறகு அரசின் கணக்குப்படியே நாட்டில் 4600 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள் ளனர். 60 ஆயிரத்திற்கும் அதிக மானோர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். நாங்கள் தேர்தல் பிரச்சாரத்திலேயே சொன்னோம். காங்கிரசைவிட சிறப்பான ஆட்சியைக் கொடுக்க மோடியிடம் மந்திரக்கோல் இல்லை. நாட்டிற்குத் தேவை ஆட்சி மாற்றம் அல்ல; கொள்கை மாற்றமே தீர்வு.
உளறல்கள்
விஞ்ஞானத்தையே கேலிக் குரியதாக ஆக்கும் வகையில் பிற்போக்கான பாதையில் நாட்டை இழுத்துச் செல்லப்பார்க்கிறது மோடி அரசு. நமது விஞ்ஞானிகள் நேரம் காலம் பார்க்காமல் மூளையைக் கசக்கி உருவாக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளை கொச்சைப் படுத்தத் தொடங்கியுள்ளனர் காவிக் கூட்டத்தைச் சேர்ந்த வர்கள். பிள்ளையார் சிலையை காட்டி, புராதான காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததாக நாட்டின் பிரதமரே உளறு கிறார். மகாபாரத காலத்தில் தொலைக்காட்சி இருந்ததாகவும், நாடுவிட்டு நாடு மட்டுமல்ல, கண்டம்விட்டு கண்டம் தாண்டும் விமானங்கள் இருந்ததாகவும், ஸ்டெம்செல் முறை யில் கவுரவர்கள் பிறந்ததாகவும் அறிவியல் மாநாட்டிலேயே கட்டுரை வாசிக்கும் அளவிற்குத் துணிந்துவிட்டனர்.
இதை அனுமதித்தால் பாடத்திட்டத்தையே மாற்றும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, குஜராத்தில் ஹிட்லரைப் புகழ்ந்துஎழுதப்பட்ட பாடத்திட்டம் இருக்கிறது. நிரூபிக்கப்பட்ட உண்மைகளே பாடத்திட்டங் களாக அமைய வேண்டுமே தவிர, வெறும் நம்பிக்கைகளைப் பாடங்களாக ஆக்குவது அறிவியல் மனப்பான்மையைச் சிதைத்துவிடும்.சென்னைக்கு வந்த பாஜக தலைவர் அமித்ஷா தமிழ் வாழ வேண்டுமென்றால் தமிழகத்தில் தமது கட்சி ஆட்சிக்கு வரவேண்டுமென்கிறார்.
அவர்கள்தான் இந்தியையும், சமஸ் கிருதத்தையும் திணித்து தமிழைமட்டுமல்ல, நமதுகலாச்சாரத்தையும் பண் பாட்டையும் சிதைக்கப் பார்க் கிறார்கள்.
போதை தெளிந்தால்....
மக்களை போதையில் வைத்திருப்பதே தமிழக அரசின் ஒரே திட்டமாக உள்ளது. மக்களின் போதை தெளிந்தால் அவர்களின் உயர்மட்ட ஊழல், ஆடம்பர வாழ்க்கை குறித்து கேள்வி கேட்டுவிடுவார்கள் என்கிற பயம் அவர்களுக்கு. தமிழகத்தில் ஒரு ஆட்சி நடப்ப தாகவே தெரியவில்லை.
கொலை, கொள்ளை, பாலியல் வன் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.உழைப்பாளிகள் ஒன்று சேர்ந்துவிடக்கூடாது என்கிற அரசியல் தந்திரத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்றுபட்ட போராட்டங்களே மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வாக முடியும்.இவ்வாறு உ.வாசுகி தனது பேச்சில் குறிப்பிட்டார்.
(ந.நி.)

வியாழன், 8 ஜனவரி, 2015

சிபிஎம் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு பேரணி-பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது



புதுக்கோட்டை, ஜன.7-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட 12-வது மாநாடு பேரணி-பொதுக்கூட்டத்துடன் புதுக்கோட்டையில் புதன்கிழமையன்று எழுச்சியுடன் தொடங்கியது.புதுக்கோட்டை பால்பண்ணை ரவுண்டானாவிலிருந்து மாலை 5 மணியளவில் தொடங்கிய பேரணியை கட்சியின்மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஒன்றியங்கள் வாரியாக செந்தொண்டர் அணிவகுப்பு, குதிரை ஆட்டம், தப்பாட்டம், நாதஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு கிராமியக் கலை நிகழ்ச்சிகளோடு ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க செம்படைப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான சின்னப்பா பூங்காவில் நிறைவடைந்தது.அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எம்.சின்னத்துரை தலைமை வகித்தார். பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் எம்எல்ஏ., ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜசேகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.செபஸ்தியான், க.செல்வராஜ், ஏ.ராமையன், எம்.முத்துராமலிங்கன், எம்.உடையப்பன், எஸ்.சங்கர், எஸ்.கவிவர்மன், என்.பொன்னி, எஸ்.பொன்னுச்சாமி, கே.சண்முகம், ஏ.ஸ்ரீதர், வி.துரைச்சந்திரன், வரவேற்புக்குழுத் தலைவர் சண்முக பழனியப்பன் ஆகியோர் பேசினர்.
முன்னதாக நகரச் செயலளார் சி.அன்புமணவாளன் வரவேற்க, மாவட்டக்குழு உறுப்பினர் டி.சலோமி நன்றி கூறினார்.பிரதிநிதிகள் மாநாடு வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் தொடர்ந்து நடைபெறுகிறது.

வியாழன், 1 ஜனவரி, 2015

அனைவருக்கும் ஆங்கில 

புத்தாண்டு வாழ்த்துக்கள்

கூலிப்படைகள் அதிகரித்துள்ள தமிழகத்தை அமைதிப்பூங்கா எனச்சொல்ல முடியுமா? மதுரை கூட்டத்தில் உ.வாசுகி கேள்வி



மதுரை,டிச.31-
தமிழகத்தில் குறிப்பாக மதுரை,சிவகங்கை, நெல்லையில் கூலிப்படைகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. நெல்லையில் 25 நாட்களில் 30 கொலைகள் நடைபெற்றுள்ளன. தமிழகத்தை அமைதிப்பூங்கா என்று சொல்ல முடியுமா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கேள்வி எழுப்பியுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட 21 வதுமாநாடு டிச-28,29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டினையொட்டி டிச-30 ம் தேதி பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசியதாவது; சென்னையில் நோக்கியா மற்றும் பாக்ஸ்கான் ஆகிய இருபன்னாட்டு நிறுவனங்கள் தங்கள்ஆலைகளை திடீரென மூடியுள்ளன.
இதனால் ஏராளமான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிறுவனங்களுக்கு 24 மணி நேர தடையில்லா மின்சாரம், குடிநீர் மற்றும் வரிச்சலுகை வழங்கப்பட்டிருந்தன. இந்தசலுகைகளால் லாபம் அனுபவித்த பின்பு ஆலைகளை மூடியுள்ளனர். இந்தஆலைகள் மூடப்பட்டதில் மத்திய, மாநில அரசுகளுக்குப் பொறுப்பு இல்லையா? எதிர்காலத்தில் ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட நிபந்தனைகளுடன் கூடிய புரிந்துணர்வுக்கு கட்டுப்படும் நிறுவனங்களை மட்டுமே தொழில் தொடங்க அனுமதிக்க சட்டமியற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
கந்துவட்டிக் கொடுமையைத் தடுக்க சட்டமிருந்தும் நெல்லையில்சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகிகோபி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்ட போது காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போராட்டம் நடத்தப்பட்டது. இதற்குப் பின்னும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலைமைகளுக்குப் பின்னால்தோழர் கோபி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கோபியை படுகொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், உரிய இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திய போது, அரசு வேலை தவறான முன்னுதாரணம் எனக்கூறினார்கள். இது தான் சரியான முன்னுதாரணம் என்றுநாம் வலியுறுத்தியப் பின் அக்கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக மதுரை,சிவகங்கை, நெல்லையில் கூலிப்படைகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. நெல்லையில் 25 நாட்களில் 30 கொலைகள் நடைபெற்றுள்ளன. தமிழகத்தை அமைதிப்பூங்கா என்று சொல்ல முடியுமா?கூலிப்படைக்கும் காவல்துறையினருக்கும் பல மாவட்டங்களில் அண்டர்ஸ்டேண்டிங் இருப்பதாக வரும் புகார்களில் தெரிவிக்கப்படுகின்றன. இதன் மீது தமிழக அரசுஎன்ன நடவடிக்கை எடுத்துள்ளது. ஊழல் வழக்கில் முதல் அமைச்சருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட வரலாறு எங்கும் நடக்கவில்லை.
மேற்குவங்கம், கேரளா,திரிபுரா மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுள்ளது. அரசியல் விரோதிகள் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது ஊழல்குற்றச்சாட்டுக்களை சுமத்தமாட்டார்கள். ஊழலைப் பற்றி பேச ஒரேதகுதியுடைய இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான். ஊழலின்ஊற்றுக்கண் உலகமயம். ஊழலைஒழிக்கவேண்டுமானால் லோக்ஆயுக்தா கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
மோடி தலைமையிலான 100 நாட்கள் ஆட்சியில் 4500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 45 ஆயிரத்திலிருந்து 55 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 2 லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி உள்ளனர். முன்பிருந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் நிலஉடமையாளர்கள் 80 சதவீதம் பேர் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று இருந்தது.
ஆனால் மோடி அரசு, விவசாயிகள் அனுமதி தேவையில்லை என்றுபல்லாயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில், அந்நிய நேரடி மூலதனத்தை இதற்கு மேல் அனுமதிக்க வேண்டாம் எனநிதிக்குழுத்தலைவராக இருந்தபாஜகவைச் சேர்ந்த யஸ்வந்த் சின்கா கூறினார். இப்போது பாஜக அரசு, இன்சூரன்ஸ் துறையில் அந்நிய மூலதன உயர்விற்காக அவசரச்சட்டம் இயற்றி நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதிக்கிறது. அத்துடன் பண்பாடு, மொழி மீது தாக்குதலைத்தொடுத்துள்ளது. இதற்கு எதிராக அனைத்துப் பகுதி மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி தீக்கதிர்